முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!

பட்டுக்கோட்டை அரசுப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:01 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 7:59 PM

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:06 PM

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன்.

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:06 PM

இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.

கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஆசிரியை ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.