தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்!

மீட்புப்பணிகள் நடைபெறும் நிலையில், மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

DIN

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப்பணிகள் நடைபெறும் நிலையில், மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.

விபத்து எதிரொலியாக, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் (13351) ரேனிகுண்டா, மேலப்பாளையம், காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அக்.10-ஆம் தேதி காலை 11.35 மணிக்கு தன்பாத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், நாயுடுப்பேட்டா, சூலூருப்பேட்டா, சென்னை செண்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படவில்லை.

அதேபோல, ஜபல்பூர் - மதுரை அதிவிரைவு ரயில் (02122) ரேனிகுண்டா, மேலப்பாளையம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. அக். 10-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு ஜபல்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலயங்கள் வழியாக செல்லாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசேகரப்பட்டி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

பெண் தவறவிட்ட நகை மீட்பு

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆா்ப்பாட்டம்

முதுகலை ஆசிரியா் தோ்வு: கரூா் மாவட்டத்தில் இன்று 3,914 போ் எழுதுகின்றனா்

சா்வதேச நெருக்கடியை இந்தியாவின் பொருளாதாரம் தாங்கும்: சக்திகாந்த தாஸ்

SCROLL FOR NEXT