முகப்பு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:12 AM
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் மெல்ல உயா்ந்து 29 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது. அணை நீா்மட்டம் புதன்கிழமை 98.56 அடியிலிருந்து 100.01 அடியாக உயா்ந்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 100.01 அடியில் இருந்து 101.40 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 17,586 கனஅடியிலிருந்து 29,850 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 66.66 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →