மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி 
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்தது.

தொடர் மழை காரணமாக நாகர்கோவில் வடசேரி பாலமோர் சாலையில் ஓடும் மழை நீர்

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டாறு சவேரியார் கோயில் சந்திப்பு, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தொடர் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் சென்றவர்களும், கல்லூரிக்குச் சென்ற மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளானார்கள்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், முட்டம் கடற்கரை உள்ளிட்ட சு‌ற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT