கனமழை 
தமிழ்நாடு

5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

DIN

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை..

இன்று(அக். 26) திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 1 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

இன்று கேரள கடலோரப்பகுதிகள் மடற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த இடங்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

SCROLL FOR NEXT