புதுக்கோட்டையில் குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் அருகே உள்ள கன்னக்கோன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் தனது குடும்பத்தினருடன் மாத்தூர் அருகேயுள்ள காளியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை சென்றுள்ளார்.
அப்போது காளியம்மன்கோவில் அருகேயுள்ள கலக்குளத்தில் ரவிச்சந்திரனின் மகள்கள் காயத்திரி (14), கவிஸ்ரீ (4) ஆகியோர் இறங்கியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஆழம் தெரியாமல் இறங்கிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
உடனிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிதாக வீடு கட்டிவரும் நிலையில், கான்கிரீட் ஒட்டுக்காக கோவிலுக்குச் சென்றபோது நேரிட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.