தமிழ்நாடு

தவெக மாநாடு: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

தவெக மாநாட்டு நாள் மாற்றம்..? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

DIN

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது.

எனினும், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து கடந்த வாரம் அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படுமென விஜய் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாடு தொடா்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறும் நாள் தொடர்பாக, தவெக கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துடன், தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு மற்றும் கட்சி குறித்த முக்கிய தகவலை வியாழக்கிழமை(செப்.12) விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

ஏடிஎம் காா்டு மூலம் நூதன மோசடி: இருவா் கைது

புல்லுவன் பாட்டு... கேரள அரசின் விருதுவென்ற ரிமா கல்லிங்கல் படம்!

SCROLL FOR NEXT