முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 17,014 கனஅடி!

மேட்டூர் அணையின் நீர் நிலவரம் பற்றி...

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 17,014 கனஅடி!

மேட்டூர் அணையின் நீர் நிலவரம் பற்றி...

Updated On : 16 செப்டம்பர், 2024 at 3:39 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,014 கனஅடியாக திங்கள்கிழமை காலை அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,629 கனஅடியிலிருந்து வினாடிக்கு 17,014 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 111.19 அடியிலிருந்து 110.77 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 79.50 டிஎம்சியாக உள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →