பேரவையில் ஸ்டாலின் 
தமிழ்நாடு

தியாகி யார்? நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்

தியாகி யார் என்ற கேள்விக்கு நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான் என்று பேரவையில் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்துவந்த நிலையில், நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான் தியாகிகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு ரூ.1,000 கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி ஊழல் செய்த தியாகி யார் என்று கேட்டு அதிமுகவினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும் அப்போது அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டதோடு, பேரவையிலிருந்து அதிமுகவினர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

பின்னர் அந்த தியாகி யார் என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, மறைந்த எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு மறைந்த ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை அதற்குப் பிறகு பொறுப்பேற்ற இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், தாங்கள் சிக்கியிருக்கக் கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக போர் யார் காலில் போய் விழுந்தார்களோ, அவ்வாறு விழுந்த நேரத்தில், அதனைப் பார்த்து நொந்து நூடுல்ஸாகிப் போன அதிமுக தொண்டர்கள்தான் இன்றைய தியாகிகளாக இருக்கிறார்கள்.

முதல்வர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ, அந்த அம்மையார் ஏமாற்றிப் போன நபர்தான் இன்று தியாகியாக உள்ளார். அந்த தியாகி யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றதற்காகத்தான் இந்த விளக்கத்தைத் தந்திருக்கிறேனே தவிர வேறொன்றும் இல்லை என்று முதல்வர் பதிலளித்துள்ளார்.

ஏன் இந்த தியாகி கேள்வி எழுந்தது?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மது ரகங்களை உற்பத்தி செய்து அளிக்கும் நிறுவனங்களிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மூன்று நாள்களுக்கு மேலாக விடிய விடிய நடைபெற்ற இந்த அமலாக்கத் துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்த தியாகி யார் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது வீட்டு வசதித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், பேரவையில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் அந்த தியாகி யார் என்ற கருப்பு பேட்ச் அணிந்து வந்தனர்.

முன்னதாக, 400 நாள்களுக்கு மேலாக சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும், அவர் ஒரு தியாகி என தமிழக முதல்வர் புகழுரை கூறியிருந்ததுமே இந்த சம்பவத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

SCROLL FOR NEXT