விராலிமலை: அன்னவாசல் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பெண்கள் கும்மியடித்து வழிபாடு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் வருடாபிஷேகம் முடிந்த நிலையில் பங்குனி மாதம் பெளர்ணமி உள்ளிட்ட இரண்டு வைபவங்களையும் அனுசரிக்கும் விதமாக அப்பகுதி பெண்கள் கோயில் முன்பு உள்ள திடலில் ஒன்றுகூடி கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.
இது குறித்து கூறிய பெண்கள், நாடு நலம் பெறவும், மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் ஒன்றுகூடி கும்மி அடித்து வழிபட்டதாகக் கூறினர்.
இரவு பத்து மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரமாக குழுக்களாக பிரிந்து கும்மியடித்து பெண்கள் வழிபட்டதை அப்பகுதி ஆண்கள், சிறுவர்கள் சுற்றி நின்று கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்க: கிருஷ்ணகிரியில் குருத்தோலை ஞாயிறு பவனி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.