முகப்பு
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Updated On : 17 ஏப்ரல், 2025 at 6:39 AM
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணிக் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரனிடம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம், ஆனால், கூட்டணி ஆட்சி கிடையாது என்று கூறியிருந்ததையும், இதே கருத்தை தம்பிதுரையும் வலியுறுத்தியிருந்தது குறித்தும் கேட்கப்பட்டது.

இதனைக் கேட்ட நயினார் நாகேந்திரன், அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நினைக்க வேண்டாம், தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என்றும் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்று கேட்டதற்கு, நன்றி வணக்கம் என பதிலளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →