வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ”பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதிலிருந்தே, பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.