திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த ஆக. 2ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார்.
பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6.30 மணியளவில் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 7.15 மணிக்கு நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் பரமசிவம், பணியாளர்கள் ராஜ்மோகன், செல்வகுத்தாலம், முருகேசன், வள்ளிநாயகம், பால்ராஜ், மாரிமுத்து, ஜெகன், நெல்லையப்பன், சுப்பிரமணியன், கோயில் செக்யூரிட்டிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.