காவலர் வேடத்தில் விநாயகர் DIN
தமிழ்நாடு

காவலரான விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

வேலூரில் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா...

இணையதளச் செய்திப் பிரிவு

காவலர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் காவல் நிலையம்போல் வடிவமைத்து காவலர்போல் வேடமிட்ட விநாயகர் சிலை வேலூரில் வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல விதமான சிலைகளை வைத்து மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாநகர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவரும் பாலாஜி நகர் இளைஞர்கள் இம்முறை காவல் நிலையம் போன்று செட் அமைத்து அதில் விநாயகரே காவலர்போல் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் தமிழ்நாடு காவல் நிலையம் போன்று தத்ரூபமாக சுற்றுச்சுவர், ஆர்ச், பெயர் பலகை உள்ளிட்டவையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முகப்பில் இரண்டு காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்பிற்கு நிற்பது போன்று விநாயகர் வேடமிட்ட இரண்டு காவலர் சிலைகள் உள்ளன. .உள்ளே சென்று பார்த்தால் ஒரு விநாயகரே ரைட்டர் ஆக அமர்ந்துள்ளார். அவர் அங்கு வரும் மக்களிடம் புகாரை பெறுவது போன்று கையில் பேனா மற்றும் நோட்டுடன் அமர்ந்துள்ளார்.

மேலும் இந்த காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் சிறைச்சாலை அமைத்து அதில் சுண்டெலியை கைதியாக்கி வைத்துள்ளனர். பரிதாபமாக சிறைச்சாலையின் கம்பியை பிடித்தவாறு நின்றிருக்கிறது அந்த சுண்டெலி.

விநாயகரிடம் இருந்த லட்டை திருடியதால் இதன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் போன்று விநாயகர் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆறுபடை வீட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர் அப்பகுதியினர்.

A statue of Lord Ganesha dressed as a policeman has been placed in Vellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முயற்சியே வலிமை!

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

SCROLL FOR NEXT