FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

வேலூர் பிரசாரத்தில் விஜய் பேசியது பற்றி...

Updated On : 23 பிப்ரவரி 2026, 1:07 pm IST
விஜய்
பகிர்:

நானும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை தெரிவித்தார்.

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

Advertisement

Advertisement

”மற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து திரும்புவீர்கள். ஆனால், இந்த முறை நீங்கள் தேர்தலில் பங்கேற்க போகிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு விஜய்தான் வேட்பாளர். அதனால் உங்கள் வீட்டில் இருப்பவர்களின் வாக்கு, விசில் சின்னத்துக்குதான். அனைவருக்கும் தெரிந்ததால்தான் அவதூறு பரப்புகிறார்கள்.

என் மீது அவதூறு பரப்பினால் மக்கள் மீது பரப்புவது போன்று, எனக்கு அரசியல் தரவில்லை என்றால் மக்களுக்கு தெரியவில்லை என்று சொல்வது போன்று. என்ன அசிங்மாக பேசினால் மக்களை அசிங்கமா பேசுவது போன்று. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை.

விஜய்யும் மக்களும் வேறுவேறு அல்ல. விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது” எனத் தெரிவித்தார்.

summary

I and the people are blood, flesh, body and soul..! Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments