சென்னையில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது.
வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து இந்த புயல் சின்னம் இன்று வடதமிழகம் - புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, டிச.1-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.1) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டுளளது. முன்னதாக டிட்வா புயல் காரணமாக நேற்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.