வி.சி. ராமையா (68)  
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பிரமுகர் சாலை விபத்தில் பலி

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளர் வி.சி. ராமையா (68) திங்கள்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி பலியானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளர் வி.சி. ராமையா (68) திங்கள்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக இருந்தவர் வி.சி. ராமையா (68). அதிமுக மாவட்டச் செயலர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.

தனது சொந்த ஊரான வாண்டாக்கோட்டையில் வசித்து வந்த இவர், திங்கள்கிழமை காலை தோட்டத்துக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, திருவரங்குளம் சாலையில் கார் மோதி படுகாயமடைந்தார்.

பின்னர் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பலியானார். அவரது உடல், உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர்! மரபுகளைக் காக்கும் வகையில் செயல்பட ஓம் பிர்லா அறிவுரை!

வல்லத்திராக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pudukkottai District AIADMK Treasurer Ramaiah (68) was killed when he was hit by a car while riding a two-wheeler on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT