முகப்பு
தமிழ்நாடு

சூலூர் அருகே கோர விபத்து: பள்ளி ஆசிரியர் பலி!

கண்டெய்னர் லாரி மோதியதில் ஆசிரியர் உயிரிழப்பு பற்றி..

Updated On : 12 டிசம்பர், 2025 at 12:13 PM
சூலூர் அருகே கோர விபத்து
பகிர்:

சூலூர் செல்லப்ப பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த விவேகானந்தர் (வயது 56) என்பவர் பட்டணம் புதூர் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆசிரியர் விவேகானந்தர், பள்ளிப் பணிகளை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பட்டணம் புதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில், லாரியின் பின்பக்க டயரில் அடிபட்டு, அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் விவேகானந்தரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

summary

Vivekanandhar (56), who was working as a teacher at the Sulur Chellappapalayam Government School, died on the spot in a horrific accident near Pattanam Puthur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.