பிரேமலதா விஜயகாந்த்  கோப்புப்படம்.
தமிழ்நாடு

மாநாடுதான் எங்களுடைய அடுத்த இலக்கு: பிரேமலதா விஜயகாந்த்

மாநாடுதான் எங்களுடைய அடுத்த இலக்கு என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மாநாடுதான் எங்களுடைய அடுத்த இலக்கு என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டியில், வரும் 28ஆம் தேதி விஜயகாந்தின் குருபூஜை. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் வரவிருக்கிறார்கள். அதற்கான ஆயத்த பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.

உள்ளம் தேடி, இல்லம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை மிகச்சிறப்பாக 3 கட்டங்கள் முடித்திருக்கிறோம். அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது.

ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டுக்காக கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். மாநாடுதான் எங்களுடைய அடுத்த இலக்கு. மாநாட்டில் நல்லதொரு அறிவிப்பை வழங்கவிருக்கிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழ்நாட்டின் அரசியலுக்கும் நிச்சயம் நல்லதொரு வழி பிறக்கும். தேமுதிக நிர்வாகிகளுடன் தினமும் பேசி வருகிறோம். தேர்தலுக்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம்.

காற்று மாசு அதிகரிப்பு: புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் தில்லி!

கேப்டன் இருந்த காலத்தில் இருந்தே தேமுதிகவுக்கு மாநில கட்சிகளும், ஒன்றிய கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். கூட்டணி குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை.

உரிய நேரத்தில் நல்ல தகவலை அறிவிப்போம். 234 தொகுதிகளும் எங்கள் இலக்கு. அதனால பொறுத்திருங்க. கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.

DMDK General Secretary Premalatha Vijayakanth has said that the convention is our next goal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

யு19 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி.!

ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல; ஆனால் காரணம் இருக்கிறது! - முதல்வர் பேச்சு

சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: சஹால்

SCROLL FOR NEXT