பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் டிச. 23-ல் ஆலோசனைக் கூட்டம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரின் நிலைப்பாட்டை எம்ஜிஆர் நினைவு நாளான டிச. 24-ஆம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வம் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த நிலையில், கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்தார். இதையடுத்து, தமிழகம் வந்த பிரதமா் மோடி, அமித் ஷா போன்றோரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னரும், அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை அவர் மேற்கொண்ட நிலையில், அவை கைகூடவில்லை. இதையடுத்து, அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிச. 15-ஆம் தேதி அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில், அண்மையில் தில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிச. 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 23 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம்நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் நினைவு நாளான டிச. 24-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.