ENS
தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

எஸ்ஐஆருக்கு முன்னதாக 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5,43,76,756 வாக்காளர்கள் உள்ளனர். சுமாா் 15 சதவீத வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தொகுதிகளைப் பொருத்தவரை சோழிங்கநல்லூா், பல்லாவரம், ஆலந்தூா் தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளா்களும், அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா். குறைந்தபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 24,368 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டவாரியாகவும் நீக்கப்பட்டவர்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி பட்டியல் இருக்கும்.

எனினும் ஆன்லைன் மூலமாகவும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் காணலாம். 'சிறப்பு தீவிர திருத்தம் 2026'(Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும் திரையில் உங்களுடைய மாவட்டம், தொகுதியைத் தேர்வு செய்தால் நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக கிடைக்கிறது.

பெயர் இல்லாதவர்கள் என்ன செய்வது?

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலமாகமோ உங்களுடைய வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவத்தைப் பெற்றும் நிரப்பிக் கொடுக்கலாம்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய படிவம் 6-யை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் நிரப்பி கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க அந்தந்த வாக்குச்சாவடிகளில் வருகிற டிச. 20, 21 ஆம் தேதிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது. இதனையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிவம் 7 - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க (இடம் மாறுதல் அல்லது இறப்பு).

படிவம் 8 - பெயர், வயது, முகவரி மாற்றத்திற்கு.

படிவம் 8ஏ - உங்களுடைய பெயரை வேறு சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றுவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும். இதன்பிறகு எந்த திருத்தமும் மேற்கொள்ள முடியதுக்கே என்பது குறிப்பிடத்தக்கது.

Is your name in the draft voter list? You can find out through the website!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT