கமல்ஹாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன்.

DIN

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத்தவறியது எனக்கு தோல்வியாகப்படுகிறது. அப்படி வந்திருந்தேன் என்றால், இன்று நான் நின்று பேசிக்கொண்டு இருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.

இதையும் படிக்க: சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்

காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்குப் பிடிக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி தேவை என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.

உங்கல் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது, அடுத்தாண்டு சட்டப்பேரவையில் ஒலிக்கப் போகிறது என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

மறுவெளியீடாகும் நாயகன்!

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

ஓடிடியில் வெளியானது மதராஸி!

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT