பெண்கள் விரும்பும் தலைவியாக வலம்வந்தவர் ஜெயலலிதா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இன்று(பிப்., 24) அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ,
"இரும்புப் பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன்..." என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.