கே.என். நேரு  
தமிழ்நாடு

உள்ளூரிலேயே விலைபோகாதவர் பிரசாந்த் கிஷோர்: கே.என். நேரு

பிரசாந்த் கிஷோரை அமைச்சர் கே.என். நேரு விமர்சித்திருப்பது பற்றி...

DIN

உள்ளூரிலேயே விலைபோகாத பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இங்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், கட்சித் தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, பிரசாந்த் கிஷோரை விமர்சித்துள்ளார்.

”விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என்ற பரபரப்பான செய்தியை சொன்னார்கள்.

உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை வரவழைத்துள்ளார். பிகார் தேர்தலில் போட்டியிட்டு பிரசாந்த் கிஷோரால் டெபாசிட்கூட வாங்க முடியவில்லை.

ஆனால், அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்களது வெற்றி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர் பணியாற்றிவிட்டு, தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார். அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தமிழக முதல்வருக்கு தெரியும். தமிழக முதல்வர் திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார்” எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

தேடல்... ஈஷா ரெப்பா!

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

SCROLL FOR NEXT