உச்ச நீதிமன்றம் 
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்

DIN

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல்அறிக்கை வெளியான சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு

அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரை பழிவாங்குவதை சமூகம் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை தவறாக சித்திரிப்பது குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கும். மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு, காரணமாக இருந்தவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று மாணவிக்கு வழங்க வேண்டும்.

அதுபோல, குற்றவியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீடு, தற்போதைய இழப்பீட்டைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்

மாணவிக்கு ஆலோசனை!

முதல் தகவல் அறிக்கைக்கு விவரங்களை கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆலோசனை கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT