கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 1ஆம் தேதி எல்லைத் தாண்டியதாக சிறைபிடித்தது.

அத்துடன் மீனவர்களின் விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறைக்காவல் முடிந்த பின் 7 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வைகோ நன்றி மறக்கக்கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நீதிமன்ற உத்தரவை அடுத்து மீனவர்கள் 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்ற கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

The Mannar court has extended the jail term of 7 Rameswaram fishermen until the 17th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: சிவசைலம் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சாதனை

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT