மேட்டூர் அணை.  
தமிழ்நாடு

9 நாள்களுக்குப் பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம் !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழே குறைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழே குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்!

நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 19,760 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.85 அடியாகவும் நீர் இருப்பு 93. 23 டிஎம்சியாக உள்ளது.

The water level of Mettur Dam dropped below 120 feet after 9 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவிப் பறிப்பு - வேதனையில்லை! மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன் | செய்திகள்: சில வரிகளில் | 06.09.25

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Coolie முதல் Lokah வரை! Cinema updates! | Dinamani Talkies | Simbu | Vetrimaran | Prithviraj | Alia

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை அமைச்சர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

SCROLL FOR NEXT