ராமதாஸ், அன்புமணி IANS
தமிழ்நாடு

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அன்புமணியுடன் சந்திப்பு குறித்து ராமதாஸ் கருத்து....

DIN

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் மகளிர் பெருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அன்புமணியை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”உலகில் அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை, எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு, சுதந்திரமாக செயல்படுவது அவரவர் உரிமை. கட்சியில் ஒருவர் போனால், இன்னொருவர் வருவார்” என்றார்

மேலும் அவர் கூறுகையில், ”அன்புமணி விவகாரம் தொடர்பாக பாமக சட்டவிதிகளை ஆராய்ந்து நாளை(ஜூன் 2) பதில் அளிக்கிறேன்.

என்னை பின்பிலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT