பாமக நிறுவனர் ராமதாஸ் கோப்புப்படம்
தமிழ்நாடு

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

அன்புமணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...

DIN

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்போது, “பாமகவில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவா்கள் மூலமாகத்தான் பாமகவில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்.” என்றார்.

இது குறித்து சென்னை வந்த ராமதாஸுடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், ”பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய். திமுக ஏன் சூழ்ச்சி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு என்ன நன்மை” என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ”என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை நீங்கள் (ராமதாஸ்) மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை மகனாக, கட்சித் தலைவராக செய்து காட்டுகிறேன். 45 ஆண்டுகள் நீங்கள் வளா்த்த கட்சியை, உங்கள் கனவுகளை நனவாக்குவோம்.” என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள், ”அன்புமணி மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கும் நிலையில் நேராக வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களாக?” என்று ராமதாஸுடம் கேட்கப்பட்டதற்கு, அவர், “அதற்கான முடிவு போகப் போகத் தெரியும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், ராமதாஸின் ஆதரவாளர்களான பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ அருள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை ராமதாஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

SCROLL FOR NEXT