முகப்பு
இண்டிகோ
தமிழ்நாடு

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..

தமிழ்நாடு

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..

Updated On : 20 ஜூன், 2025 at 5:20 AM
இண்டிகோ
பகிர்:

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது.

இந்த நிலையில், நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு திரும்பிவந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சென்னையில் இருந்து தூத்துக்குடி, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →