ராமலிங்கம்  
தமிழ்நாடு

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்.

DIN

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்.

வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை(திங்கள்கிழமை) மதியம் புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் முறைப்படி பொறுப்பேற்கிறார். புதுவை மாநில பாஜக தலைவராக தற்போது சு.செல்வகணபதி எம்.பி. இருந்து வருகிறாா்.

அவா் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறாா். புதுவைக்கு வரும் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

எனவே, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய தலைவா் தோ்ந்தெடுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 முதல் பிற்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Ramalingam is set to be elected unopposed as the Puducherry BJP president.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT