கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(நவ. 5) காலை நடைபெற்றது.
இதில் கூட்டணி குறித்துப் பேசிய இபிஎஸ், கூட்டணி தொடர்பான பிரச்னைகளை, தான் பார்த்துக்கொள்வதாகவும் கூட்டணி பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை, அது தானாக நடக்கும் என்றும் பேசியுள்ளார்.
கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்றும் பூத் கமிட்டி பணிகளை, சரியாகப் பார்த்தாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.