புதுக்கோட்டை நார்த்தாமலை சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று பழுது காரணமாக திடீரென தரையிறங்கியது.
புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் இந்த விமானத்தைத் தள்ளி சாலையோரத்தில் நிறுத்தியுள்ளனர்.
சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு வந்த அந்த பயிற்சி விமானத்தில் விமானி உள்பட இருவர் பயணித்துள்ளனர்.
சிறிய ரக பயிற்சி விமானம் என்பதால் பழுது ஏற்பட்டவுடன் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
விமானத்தின் ஒரு பகுதி இறக்கை உடைந்ததால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் மக்கள் அதிகமாக கூடியுள்ளனர். அவர்களை போலீசார் விலக்கி வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லியில் நடந்தது பயங்கரவாதத் தாக்குதல்! - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.