மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 9,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்த காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 12,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,208 கன அடியிலிருந்து விநாடிக்கு 6,026 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதங்கள் வழியாக விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.50 அடியிலிருந்து 112.11அடியாக குறைந்தது. நீர் இருப்பு 81.44 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: புயல் சின்னம்: இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!