வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் அதுசார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணியளவில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மதுரை, பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நண்பகல் 12 மணியளவில் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கோவையில் அருண்ராஜ் தலைமையில், திருச்சியில் ராஜ்மோகன் தலைமையில் என அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.