காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இரவு முதல் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை சமூக ஊடகங்களில் அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியான மழைப்பொழிவு கடலுக்கு நெருக்கமான இடங்களில் இருக்கும் என்பதால், நேற்றுடன் ஒப்பிடும்போது அடுத்த 2-3 நாள்களுக்கு டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை.
சென்னை, புறநகர் மாவட்டங்களில் (திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பதிவானது. இன்றிரவு முதல் நாளை காலைக்குள் மழை பெய்யும்.
சென்னைக்கு ஆபத்து என்று கூறமுடியாது, மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது குமரிக்கடல் - ராமநாதபுரம் கடல் பகுதிகளில் நிலவுவதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடியில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மாத இறுதியில் புயல்
நவம்பர் மாத இறுதியில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்குமுன்பு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.