கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ. 17) காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவியது.

இது இன்று (நவ. 18) காலையில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று(நவ. 18) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுவை மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Schools in Cuddalore and Villupuram districts have been declared holiday today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT