தென்காசி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சண்முகத்தாய் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தின் முன்பாகம் முழுவதும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.