ராமதாஸ் - அன்புமணி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார் அன்புமணி! - ராமதாஸ் குற்றச்சாட்டு

அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் ஆணையத்தை அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

"எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கு தெரியும். என்னுடைய உயிரை மட்டும்தான் அன்புமணி பறிக்கவில்லை, மற்ற எல்லாவற்றையும் பறித்துவிட்டார். 46 ஆண்டுகளாக நான் சிந்திய வியர்வை வீணாகப் போய்விடக் கூடாது. என்னுடைய உரிமையை யாரும் பறிக்க முடியாது. உச்சநீதிமன்றத்திற்குச் சென்றாலும் முடியாது. தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார். உடனிருந்தவர்களை விலைக்கு வாங்கியதுபோல தேர்தல் ஆணையத்தையே இப்போது விலைக்கு வாங்கிவிட்டார். உண்மையை சொன்னாலும் தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள மறுக்கிறது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். அனைவரும் அன்புமணியின் சூழ்ச்சியை புரிந்துகொண்டுள்ளனர். அன்புமணி எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் இந்த ராமதாஸ்தான் ஜெயிப்பார். ராமதாஸை யாராலும் தோற்கடிக்க முடியாது. அன்புமணியின் தலையீட்டால்தான் பாமக இன்று இந்த நிலையில் இருக்கிறது. இனி எதுவும் விட்டுக்கொடுக்க முடியாது. என்னுடைய உழைப்பை யாரும் பறிக்க முடியாது. உனக்கு வரும் கூட்டம் காசு கொடுத்து வரும் கூட்டம். ஆனால் என்னைப் பார்க்க மக்கள் வருவார்கள்.

நான் வயிறு எரிந்து சொல்கின்றேன், உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது. =இனிமேல்தான் பாமக வளர்ச்சி அடையும். தேர்தல் ஆணையத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். இங்கு நீதி, நியாயம் தான் வெற்றி பெறும்" என்று பேசியுள்ளார்.

Anbumani bought the Election Commission with the help of money: Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம்: தொல். திருமாவளவன்

சிதம்பரத்தில் நந்தனார் ஆலய கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

குழிக்குள் சிக்கிய யானைக்குட்டி! மீட்புப் பணிகள் தீவிரம்! | Animal rescue | CBE

வங்கதேசத்துக்கு ஆதரவு... டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

SCROLL FOR NEXT