டிட்வா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நாளை(நவ.30) 47 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 36 உள்நாடு, 11 சர்வதேச விமானங்களின் சேவைகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு தகுந்தாற்போல பயணத்திட்டத்தை வகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக சென்னையில் இன்றும் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் உருவான "டிட்வா" புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை (30- 11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.
புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக புயல் சென்னையை நெருங்கி வருவதால் இன்று இரவு முதல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.