வடகிழக்குப் பருவமழை 
தமிழ்நாடு

நாளை(நவ.30) மாலை 25 கிமீ தொலைவில் தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்!

கடந்த 6 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 130 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 6 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 130 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் மிக தீவிரமாக இருந்தது. நாகை கோடியக்கரையில் 250 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது.

அக்.1 முதல் நவ.29 வரை இயல்பான மழை அளவு 35%, பதிவான மழையின் அளவு 38%, கூடுதலாக 3% பெய்துள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 130 மி.மீ., நாகையில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

டிச.1 முதல் மழை படிப்படியாக குறையும், திருவள்ளூரில் மட்டும் அன்று கனமழை பெய்யும். புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் 70-80 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். நாளை வடதமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புறகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் விட்டு விட்டு கன மழை பெய்யும். எதிர்பார்க்கும் நேரத்தில் புயலின் நகர்வு இருக்காது.

தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 - பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய அரசு!

நாளை மாலை முதல் புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. கடலோரப் பகுதிகளில் டிட்வா புயல் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. கரையைக் கடக்காது என இதுவரை கணிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 60 கி.மீ., நாளை மாலை 5.30 மணிக்கு பிறகு 25 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது புயலாகவே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என முன்பு கூறப்பட்டிருந்தது.

நாளை மாலை 6 மணிக்கு டிட்வா புயல் சென்னைக்கு அருகே புயலாகவே தென்மேற்கு வங்கக்கடலை அடைகிறது.

Karaikal received a maximum of 130 mm of rain in the last 6 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!

‘இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகமளிக்கும்!' - பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காற்று மாசுபாட்டுக்கு நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது: ராகுல் காந்தி கவலை

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!

ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!

SCROLL FOR NEXT