கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கே. ஆர். பெரியகருப்பன். 
தமிழ்நாடு

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின்னர், சிவங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி இடங்கள் மற்றும் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, அருங்காட்சியகத்தில் சுமார் 13,000 தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன.

நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது திமுக அரசு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

I saw Keezhadi and felt proud! - CM Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

SCROLL FOR NEXT