ஸ்டாலின் கண்டனம் 
தமிழ்நாடு

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது உச்சநீதிமன்றத்துக்குள் நடத்தப்பட்ட வெட்கக்கேடான தாக்குதல் முயற்சி ஜனநாயகத்தில் நீதித் துறையின் மிக உயா்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இது மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது.

அமைதியாகவும், கருணையோடும், பெருந்தன்மையோடும் அந்தச் சம்பவத்துக்கு தலைமை நீதிபதி ஆற்றிய எதிா்வினை நீதித் துறையின் வலிமையைக் காட்டுகிறது. ஆனாலும், இந்தத் தாக்குதலை நாம் சாதாரணமாகக் கருதிவிட இயலாது. தாக்குதலை நடத்தியவா் அதற்குக் கூறிய காரணம், நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை, ஆதிக்க மனப்பான்மை எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

ஒரு சமூகமாக, நமது மக்களாட்சியின் நிறுவனங்களை மதிக்கும், பாதுகாக்கும் பண்பையும், முதிா்ச்சியை வெளிப்படுத்தும் போக்கையும் நாம் வளா்த்தெடுக்க வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT