பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் உடல்நிலைக் குறித்து அப்பல்லோ மருத்துவமனை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக ராமதாஸ் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராமதாஸ் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
”பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து, அவரது உடல்நிலைக் குறித்து விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.