குறையத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்பாக...
மேட்டூர் அணை நீர்மட்டம் 112.27 அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 13,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,266 கன அடியிலிருந்து 6,867கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாகவும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர் இருப்பு 81.67 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: 'ஒரு வழக்குரைஞருக்கே இந்த மனநிலை என்றால்...' - தலைமை நீதிபதி தாக்குதல் முயற்சிக்கு கார்கே கண்டனம்!
Regarding the water level of Mettur Dam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.