கை நம்மைவிட்டு போகாது என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதன்கிழமை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வீரா சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் வியாழக்கிழமை காலை உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை வந்ததில் இருந்து செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த விழாவுக்கு காரில் இருந்து இறங்கி முழுமையாக வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. என்னுடைய கைகளுடன் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், என்றைக்கும் கை நம்மைவிட்டு போகாது. நான் என்னுடைய கைகளை சொன்னேன்.
பாஜகவுக்கு இபிஎஸ் என்ற அடிமை இருக்கிறார். தற்போது புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் பரவிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் சூசகமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக, ஈரோட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தவெக கொடியுடன் தொண்டர்கள் கோஷமிட்டனர். அதனைப் பார்த்த இபிஎஸ், கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.