சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை அதிகாலை தொடர்பு கொண்ட மர்ம நபர், நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் அதிகாலையிலேயே காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.