நொறுங்கிய கார். 
தமிழ்நாடு

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஓசூர் அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர்.

ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி சானமாவு வனப்பகுதியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் கார் நொறுங்கியதில் காரில் பயணித்து சேலம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது.

ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி, கார் மற்றொரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து சென்றது.

பின்னால் வந்த லாரி, கார் மீது மோதிய விபத்தில் காரில் பயணித்த இளைஞர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விசாரணையில் மணிவண்ணன் என்பவர் கனடா நாட்டில் இருந்து பெங்களூரு வந்துள்ளாதாகத் தெரிகிறது, மணிவண்ணனை சேலத்தைச் சேர்ந்த முகிலன் மற்றும் அவரது நண்பர்கள் அழைத்துச் வர சென்றபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நொறுங்கிய கார்.

இதில் கார் நொறுங்கியதால், காரில் பயணித்த நான்கு பேருமே பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது, உடனடியாக போலீஸார் அடிபட்ட வாகனங்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Four people died on the spot in a head-on collision between vehicles near Hosur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT