விபத்துக்குள்ளான கார்.  
தமிழ்நாடு

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர்.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதிகளைக் கடக்க முன்பு 45 நிமிடங்கள் வரை ஆன நிலையில் தற்போது பத்து நிமிடங்களில் மேம்பாலத்தில் இந்த சாலையைக் கடக்க முடிகின்றது.

இந்த புதிய பாலத்தில் வாகனம் வைத்திருக்கக் கூடிய நபர்கள் அனைவரும் பயணித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே இன்று அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் பகுதிக்கு ஜிடி மேம்பாலத்தில் சென்ற கார், பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் விபத்துக்குள்ளான காரில் இருந்த இருகூரைச் சேர்ந்த சேக் உசேன் மற்றும் அவருடன் பயணித்த பெண் மற்றும் இளைஞர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார் அப்பளமாக நொறுங்கிய நிலையில் காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் நீண்ட போராட்டத்திற்குப் பின் போலீஸார் மீட்டு, கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

மேலும் பலியான மற்ற இருவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Three people were killed when a car crashed into a lorry parked near the newly constructed GD Naidu flyover in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT