நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியிலிருந்து 5 படகுகளில் கடலுக்குள் சென்ற 19 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்கள், தாக்குதல் நடத்தி உடமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த கங்கைநாதன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி இழைப் படகில் மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர். அன்று இரவு கோடியக்கரைக்கு அப்பால் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கைப் படகு ஒன்றில் வந்த மூவர் மீனவர்களின் படகில் ஏறி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மீனவர்களின் உடமைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல, புஷ்பவனத்தில் இருந்து மேலும் நான்கு படங்களில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி செல்லிடப்பேசி உள்ளிட்ட உடமைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
ஐந்து படகுகளில் சென்று பாதிப்படைந்த 19 மீனவர்களும் திங்கள்கிழமை கரைக்குத் திரும்பிய நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகிறனர்.
இதையும் படிக்க | கரூர் பலி: இலவச சட்ட உதவி மையத்தை அணுகிய பாதிக்கப்பட்டவர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.